திருவள்ளூர் அருகே, 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திம்மபூபாலபுரம் கிராமத்தில்,பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரியை பயன்படுத்துவோர் சங்கத்தின் மூலம்,28 லட்சம் மதிப்பிலான குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளும் திட்டத்தை ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.
இதில் ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்துதல், வரத்துக் கால்வாயினை தூர்வாருதல் மற்றும் பாசனக் கால்வாயினை மேம்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெறும் எனவும் இந்த பணிகளில் அரசின் பங்களிப்பு 90 சதவிகிதமும், பாசன தாரர்களின் பங்களிப்பு 10 சதவிகிதமும் செலவிட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.
Discussion about this post