3 பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள், நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பரோடா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வங்கிகள் இணைப்பு நடவடிக்கையைக் கண்டித்து கடந்த 21-ம் தேதி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நாடு முழுவதும் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுமுறை முடிந்து வங்கிப் பணிகள் இன்று மீண்டும் துவங்கும் நிலையில், நாடு முழுவதும் இன்று 85 ஆயிரம் வங்கிக் கிளைகளைச் சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலைநிறுத்தம் காரணமாக, வங்கியில் பணம் எடுப்பது, வைப்பு வைப்பது ஏற்றுமதி, இறக்குமதி கணக்கு, அரசாங்க கருவூல கணக்கு உள்பட பல்வேறு வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ரூ.1 லட்சம் கோடி காசோலை பரிவர்த்தனையும், தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடி காசோலை பரிவர்த்தனையும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Discussion about this post