அயோத்தியிலிருந்து, ராமர் வாழ்ந்த இடங்கள் வழியாக ராமேஸ்வரம் செல்லும், ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
ராமாயணத்தின் படி, ராமர் பிறந்த ஊரான இந்தியாவின் அயோத்தியில் இருந்து, ராமேஸ்வரம் வரையிலான ஆன்மீக சுற்றுலா ரயில் சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்த சேவை, நவம்பர் 14-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று டெல்லியின் சஃப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து, ரயில் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.
அயோத்தியின் ஹனுமன் கிரியிலிருந்து தொடங்கி, ராமர் வாழ்ந்ததாக கருதப்படும் ராம்கோட், நந்திகிராம், சீதாமார்ஹீ, ஜனக்பூர், வாரணாசி, பிராயக், சிறிங்காவ்பூர், சித்திரகோட், நாசிக், ஹம்பி மற்றும் ராமேஸ்வரம் வரை செல்கிறது. 800 பேர் பயணிக்கக் கூடிய இந்த ரயில், 16 நாட்களில் ஆன்மீக சுற்றுலாவை முடித்து திரும்பும்.
Discussion about this post