ஸ்பைடர் மேன், எக்ஸ் மேன், மார்வல் காமிக்ஸ் உள்ளிட்ட கதாப்பாத்திரங்களை உருவாக்கிய “ஸ்டன் லீ” உடல்நல குறைவால் 95 வயதில் காலமானார்.
ஹாலிவுட்டில் புகழ்பெற்ற ஸ்பைடர் மேன், எக்ஸ்மேன் உள்ளிட்ட கற்பனை கதாப்பாத்திரங்களை உருவாக்கியவர் ஸ்டன் லீ. இவர் 1922-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தார். 16-வது வயதில் டைம்லி காமிக்ஸில் தனது பயணத்தை துவங்கிய ஸ்டன் லீ, தனது சிந்தனையால் பல வியக்க வைக்கும் கதாப்பாத்திரங்களை உருவாக்கினார். மேலும் மார்வல் காமிக்ஸின் தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
இந்தநிலையில் வயது முதிர்வு காரணமாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த ஸ்டன் லீ, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு உலக தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post