தலைவாசலில் அமைக்கப்படும் கால்நடை பூங்காவுக்கான முத்திரை வெளியீடு

ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவுக்கான முத்திரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.

தலைவாசல் பகுதியில் சர்வதேச தரத்தில் தெற்காசியாவிலேயே பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரியை, ஆயிரத்து 22 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, இன்று நடைபெற்ற விழாவில், இப்பணிகளுக்கான அடிக்கல்லை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாட்டினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். கால்நடை மருத்துவக்கல்லூரி, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் ஆகிய பிரிவுகளுடன், ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவாக இந்த வளாகம் திகழும்.

இதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவுக்கான முத்திரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக, கால்நடை கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பார்வையிட்டார். அவருடன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் கண்காட்சியை பார்வையிட்டனர். இந்த கண்காட்சியில், நாட்டு பசுக்கள், ஆட்டினங்கள், கால்நடை தீவனங்கள் குறித்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

Exit mobile version