கேவலம் நடிகைகள் என்ற வார்த்தையை பயன்படுத்திய மு.க.ஸ்டாலினுக்கு சமூக வலைதளங்களிலும், திரைத்துறையிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளதோடு, ராதாரவி பாணியில் ஸ்டாலின் தனது பதவியில் இருந்து விலகுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி பல தரப்பினரையும் சந்தித்து பேசுவதாக தெரிவித்தார்.
தொழில் அதிபர்கள், ஆண் திரை நட்சத்திரங்களை மோடி சந்திப்பதாக மரியாதையாக குறிப்பிட்ட ஸ்டாலின் நடிகைகளை குறிப்பிடும் போது, கேவலம் நடிகைகள் என குறிப்பிட்டது, திரையுலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பதிவில், வேலை செய்யும் பெண்கள் அனைவரையும் ஸ்டாலின் அவமதித்து விட்டதாகவும், ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவிக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதே போல் நடிகை ராதிகா சரத்குமாரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் நயன்தாரா பற்றி இழிவாக பேசிய ராதாரவியை கட்சியை விட்டு நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்தார் மு.க.ஸ்டாலின். இதனை அவரது சகோதரி கனிமொழியும் வரவேற்றார். ஆனால் ராதாரவியை விட மிக இழிவாக நடிகைகளை பற்றி பேசிய ஸ்டாலின் அதற்காக தன் மீது கட்சி நடவடிக்கை எடுக்கலாம் என அறிவிக்கத் தயாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விசயத்தில் கனிமொழி வாய் திறப்பாரா என்ற துணைக் கேள்வியும் எழுந்துள்ளது.
Discussion about this post