அதிமுக அரசு செய்த நலத்திட்டங்கள் அனைத்தையும் மக்களிடமிருந்து மறைத்து வைக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டியிலுள்ள தும்பூரில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பொய் சொல்ல வேண்டிய அவசியம் திமுக-விற்கு தான் உள்ளதே தவிர, அரசியல் உச்சக்கட்ட நாடகம் தான் ஸ்டாலினின் திண்ணை பிரசாரம்-முதலமைச்சர்
ஆளும் அதிமுக-விற்கு இல்லை எனக் கூறினார். திமுக தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டில் துளி அளவும் உண்மையில்லை என்று கூறிய முதலமைச்சர், ஸ்டாலின்தான் வாய் திறந்தால் பொய் மட்டுமே பேசி வருகிறார் எனக் குற்றம்சாட்டினார்.
நீட் தேர்வு கொண்டு வர மூலக் காரணமாக அமைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி தான் எனக் குற்றம்சாட்டிய முதல்வர், நீட் தேர்விலிந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்த அரசு, அதிமுக அரசு என்று கூறினார். அப்படியிருக்கும் போது நீட் தேர்விற்கு அதிமுக தான் காரணம் என்று ஸ்டாலின் கூறுவது எவ்வாறு உண்மையாக முடியும் என அவர் கேள்வி எழுப்பினர்.
நீட் தேர்வு கொண்டு வர மூலக் காரணமாக அமைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி தான் எனக் குற்றம்சாட்டிய முதல்வர், நீட் தேர்விலிந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்த அரசு, அதிமுக அரசு என்று கூறினார். அப்படியிருக்கும் போது நீட் தேர்விற்கு அதிமுக தான் காரணம் என்று ஸ்டாலின் கூறுவது எவ்வாறு உண்மையாக முடியும் என அவர் கேள்வி எழுப்பினர்.
அரசியல் உச்சக்கட்ட நாடகம் தான் ஸ்டாலினின் திண்ணை பிரசாரம் என முட்டத்தூர் பிரசாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவிலேயே, பொய்யில் பிறந்து, பொய்யில் வளர்ந்த ஒரே கட்சி திமுக தான் என்றும் முதலமைச்சர் சாடினார்.
அதிமுக அரசின் திட்டங்களே விவசாயிகளின் பயனுள்ள திட்டங்களாக உள்ளதாக பனமலை பிரசாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். குடிமராமத்து திட்டம் விவசாயிகளின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், நந்தன்கால்வாய் திட்டத்திற்காக 40 கோடி ரூபாய் நிதியை தன்னுடைய தலைமையிலான அரசு ஒதுக்கியுள்ளதாக கூறினார்.
வாரிசு அரசியலை ஆதரிக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை பற்றி விமர்சிக்க துளியும் தகுதி இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஒரு தொண்டனைக் கூட அதிமுக-விலிருந்து ஸ்டாலினால் பிரிக்க முடியாது என கடையம் பிரசாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக ஆட்சியை கலைக்க ஸ்டாலின் என்ன திட்டம் போட்டாலும் அது நிறைவேறாது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Discussion about this post