2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருந்தால், அது தாளில் சர்க்கரை என எழுதிச் சுவைப்பதற்குச் சமமாகும் எனப் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வன்னியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு, முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் என்பன உள்ளிட்ட ஏராளமான வெற்று வாக்குறுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் அளித்துள்ளதை அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தோல்வியடையும் என்கிற அச்சம் தான், ஸ்டாலின் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதற்குக் காரணம் என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட புரட்டான வாக்குறுதிகளை வழங்கிய ஸ்டாலின், ஏழை மக்களை ஏமாற்றிக் கடனாளிகள் ஆக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வன்னியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று கருணாநிதி முரசொலியில் கடிதம் எழுதி வெளிப்படையாகவே அறிவித்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
அப்படிப்பட்ட திமுக, இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனி ஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறுவது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதற்கு இணையானது தான் எனக் குறிப்பிட்டுள்ளார். 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருந்தால், அது தாளில் சர்க்கரை என எழுதிச் சுவைப்பதற்குச் சமமாகும் எனப் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Discussion about this post