தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தொழிற்சாலைக்குள் சென்று வாக்கு சேகரித்து, விதிமுறைகளை மீறி இருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மோட்டு கொள்ளை பகுதியில் இயங்கி வரும் தனியார் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதி பெறாமல் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பொருளாளர் துரைமுருகன், வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் தொழிற்சாலை உள்ளே பொதுக்கூட்ட மேடை மாதிரி அமைத்து தொழிலாளர்களிடம் ஒரு மணி நேரமாக வாக்கு சேகரித்துள்ளனர்.
தொழிலாளர்களிடம் பேசிய ஸ்டாலின், பிரசார ரீதியில் பேசியதாக புகார் எழுந்துள்ளது. இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதுபோன்ற திமுகவினரின் அத்துமீறிய கடும் செயலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Discussion about this post