தேர்தல் பிரசாரத்தின் போது கொடநாடு விவகாரம் தொடர்பாக பேசுவது தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி பேசியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், கொடநாடு விவகாரம் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அது குறித்து தொடர்ந்து பேசுவது ஏற்புடையதல்ல என தெரிவித்தார். கொடநாடு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 3 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி இளந்திரையன், அதுவரை கொடநாடு விவகாரம் தொடர்பாக ஏதும் கருத்து கூறக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
Discussion about this post