திமுக தலைவர் ஸ்டாலினை பொருத்தவரை தினசரி ஏதாவது ஒரு குற்றச்சாட்டை பத்திரிக்கைகளில் கூறி, தான் இருப்பதை காட்டிக் கொள்ள வேண்டும் என்பதே அவரது விருப்பம் என சட்டபேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஆயிரத்து 407 முதியோர் உதவித்தொகை பெரும் பயனாளிகளுக்கு, ரேசன் பொருட்கள் வழங்க ஏதுவாகஸ்மார்ட்கார்டுகள் வழங்கப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக, மேட்டுப்பாளையம், சூலக்கல், கோவிந்தாபுரம், சென்றாம்பாளையம், நல்லட்டிபாளையம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் 231 முதியோர்களுக்கு, சட்டப்பேரவை துணை சபாநாகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒவ்வொரு பொழுது விடியும்போதும் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு புதுப்புது கதையை சொல்லிக்கொண்டே இருப்பார் என குற்றம்சாட்டினார்.
Discussion about this post