கீழடியில் தென்னை மரங்களை வெட்டி கிராம சபை கூட்டத்தை நடத்திய தி.மு.க.வினர், ஸ்டாலினுக்கு சிவப்பு கம்பளம் விரித்து தங்கள் ஆடம்பரத்தை காட்டினர். இது எல்லாவற்றையும் விட திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. போஸ் என்பதற்கு பதில் சாமி என ஸ்டாலின் உளறிக் கொட்டியதை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்பட்டது. விதிகளை மீறி கூட்டம் சேர்ப்பதற்காக அருகில் உள்ள பள்ளியில் இருந்து மாணவ, மாணவிகளும் அழைத்து வரப்பட்டனர். பொதுமக்களுக்கு குந்தகம் விளைவிக்காத வண்ணம் கூட்டம் நடத்துவதாக கூறிவிட்டு தோப்புக்குள் கூட்டம் நடத்திய தி.மு.க.வினர், அங்கிருந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை பயன்படுத்த தடை உள்ள நிலையில் அதை அப்பட்டமாக மீறி, கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை ஆங்காங்கே தி.மு.க.வினர் கட்டியிருந்தனர்.
கிராம சபை கூட்டத்தில் பெண்களின் குறைகளை முழுமையாக கேட்காத ஸ்டாலின், பள்ளி மாணவர்களிடம், தன்னைப் பார்ப்பதற்காக வந்தீர்களா என்று விசாரித்து அதிர வைத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வின் பெயரை சாமி என கூறி உடன் பிறப்புகளையே நெளிய வைத்தார் ஸ்டாலின்.
மறைந்த சட்டமன்ற உறுப்பினரின் பெயர் கூட தெரியாத ஒருவர் மாநிலத்தை ஆள ஆசைபடுவது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போல் இருப்பதாக கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களின் விமர்சனமாக உள்ளது.