முகேஸ் அம்பானியின் இல்லத் திருமணத்திற்கு செல்லப்போகும், ஸ்டாலின், அங்கு கடைபிடிக்கப்படும் இந்து கலாச்சாரங்களை பார்த்து என்ன சொல்லப்போகிறார் என நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.
இந்து திருமண முறைப்படி பற்றி, திமுக தலைவர் ஸ்டாலின் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதனை நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். எந்த கல்யாணம் சென்றாலும் இந்த உரை தான் போலிருக்கு, அடுத்து அட்டன் பண்ணப்போறது அம்பானி வீட்டு கல்யாணம், அங்கேயும் புகை, சமஸ்கிருத மந்திரம், பிராமண புரோகிதர்கள் எல்லாம் இருப்பார்களே” என விமர்சித்துள்ளார் கஸ்தூரி.