வேலூரில் மக்களவை தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு திமுகவினரின் பணவிநியோகமே காரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்
வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி. சண்முகத்துக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது பிரசாரத்தை துவங்கினார். இரண்டாவது நாளான இன்று கே.வி. குப்பத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார். மேடையில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ படத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், வேலூர் மக்களவை தொகுதிக்கு முன்னரே தேர்தல் நடந்திருக்க வேண்டும் என்றும், திமுகவினரின் பண விநியோகம் காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டதாக அவர் கூற்றம் சாட்டினார்
தொடர்ந்து பேசிய அவர், தான் ஒரு விவசாயி என்று குறிப்பிட்டதோடு, ஒரு விவசாயி நாட்டை ஆளக்கூடாதா என்றும் கேள்வி எழுப்பினார். திமுக தலைவர் ஸ்டாலின் பதவி ஆசை பிடித்து இருக்கிறார் என்றும் அவரால் அதிமுக அரசை வீழ்த்த முடியாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்
Discussion about this post