விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி-2!

இந்திய விண்வெளி மையமான இஸ்ரோ புதிய எஸ்.எஸ்.எல்.வி- 2 ரக ஏவுகணையை இன்று அதிகாலை 9.18 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்த ஏவுகணை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.

இதற்கு முன்பு கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனுப்பப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி-1 ரக ஏவுகணை தோல்வியில் முடிந்தது. இந்த ஏவுகணையில்  பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்.07 மற்றும் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் செலுத்தப்பட்டு தோல்வி அடைந்த செயற்கைக்கோள்களுக்கு பதிலாக தற்போது தயாரிக்கப்பட்ட ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 உள்பட 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களை பூமியில் இருந்து 356.2 கிலோ மீட்டர் உயரத்தில் 450 கிலோமீட்டர் புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

Exit mobile version