ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்ட விழா

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் திகழ்வதும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில்.  12 ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரான ஸ்ரீஆண்டாள் அவதரித்த புண்ணிய பூமி ஸ்ரீவில்லிபுத்தூர்.  ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூர நன்நாளை கொண்டாடும் விதமாக ஆடிப்பூர திருவிழா சிறப்பாக நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி, மதுரை கள்ளழகர் கோயில்,  ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோயில் ஆகியவற்றிலிருந்து பிரசாதமாக கொண்டு வரப்பட்ட பரிவட்டங்கள் ஸ்ரீஆண்டாளுக்கும், ஸ்ரீரெங்க மன்னாருக்கும் சாத்தப்பட்டன. இதனையடுத்து, வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்க மன்னார் ஆகியோர், தி௫த்தேரில் எழுந்த௫ளினர். பக்தர்களின் “கோவிந்தா, கோபாலா” என்ற முழுக்கத்துக்கு இடையே, தேர் வலம் வந்தது. நான்கு மாடவீதிகள் வழியாக வலம் வந்த திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாளை வழிபட்டனர்.
 
Exit mobile version