திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் ஆதிபிரம்மோத்ஸவம் எனப்படும் பங்குனி திருவிழா 11நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி பங்குனி உற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்திற்கு வந்து சேர, பின்னர் கொடிப்படம் புறப்பட்டு கொடியேற்றும் வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு நம்பெருமாளை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம் 22ம் தேதி நடைபெற உள்ளது.
Discussion about this post