காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது. சுங்குவார்சத்திரம் அடுத்த கண்ணன்தாங்கல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த திங்கட்கிழமை, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை, மகா பூர்ணாஹுதி உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.
இன்று நான்காம் கால பூஜைக்கு பின்னர் யாகசாலை பூஜையிலிருந்து, புனித நீர் குடங்கள் கோயிலை சுற்றி கொண்டு வரப்பட்டு, கோயில் விமானத்துக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் பங்கேற்றார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Discussion about this post