திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலங்கை பிரதமர் ராஜபக்சே ஸ்வாமி தரிசனம் செய்தார்.
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ராஜபக்சே பிரதமர் மோடியை சந்தித்த பிறகு நாட்டின் பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார். இறுதியாக ஆந்திர மாநிலம் திருப்பதி வந்த அவர், ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் நுழைவாயிலில் தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், அர்ச்சகர்கள் இஸ்தி கப்பால் ஆகியோர் ராஜபக்சேவுக்கு மரியாதை செய்தனர். யுடன் ராஜபக்சேவை கோவிலுக்குள் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்து வைத்தனர். இதனையடுத்து தங்க கொடி மரத்தை தொட்டு வணங்கியதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். சிறப்பு விமானம் மூலம் அவர் இலங்கை செல்ல உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post