ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடுக்கடலில் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியதில், இருபதுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் கண்ணாடி சேதமடைந்தது.
ராமேஸ்வரத்தில் இருந்து 566 விசைப்படகுகளில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். இதில் முப்பதுக்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை எல்லைக்குள் சென்றதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கற்களையும், கண்ணாடி பாட்டில்களையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் இருபதுக்கும் மேற்பட்ட படகுகளின் கண்ணாடி முற்றிலும் சேதமடைந்தது. ஒரு படகில் இருந்த வலைகளையும் இலங்கை கடற்படையினர் அறுத்து எடுத்துள்ளனர். இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலால், பகல் நேரத்தில் மீன் பிடிக்கவே இயலவில்லை என்று கரை திரும்பிய மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.
Discussion about this post