இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில் 350க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மேலும் அங்கு தினம் தினம் நடைபெறும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சிறுமி ஒருவர் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரசாந்தி ரஜனிகாந்த் என்ற சிறுமி தற்போது 12ம் வகுப்பு படித்து வருகிறார்.அவர் கோபண்ட்மீ என்ற இணையதளம் மூலம் நிதி திரட்டுகிறார். இலங்கையை பூர்விகமாக கொண்ட அச்சிறுமி 2008ல் கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.
இந்நிகழ்வு குறித்து அச்சிறுமி கூறுகையில், என்னுடைய தாய்நாடு என்ற வகையில் நான் இந்த உதவியை செய்யவில்லை. இவ்வளவு மக்கள் இறப்புக்கு பிறகும் அந்த பிரச்சனை தீரவில்லை. இதில் திரட்டப்படும் தொகை அனைத்தும் இலங்கை அசிரி மருத்துவமனை மற்றும் கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் சிகிச்சைக்காக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
1000 டாலர்களை இலக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிதி திரட்டலில் இதுவரை 836 டாலர்கள் வரை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post