இலங்கை குண்டு வெடிப்பு குறித்து முன்னதாக தகவல் அளிக்காத ராணுவச்செயலர் மற்றும் காவல் துறை ஆணையர் ஆகியோர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என அந்நாட்டு அதிபர் சிறிசேன உத்தரவிட்டுள்ளார்
இலங்கையில் கடந்த ஈஸ்டர் நாளன்று பல்வேறு தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. உலகை அதிரவைத்த இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த நிலையில் இந்த தாக்குதல் இலங்கை அரசாங்கத்திற்கு முன்னரே தெரியும் என்றும் ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து ராணுவ செயலர் ஹேமா ஸ்ரீ பெர்னான்டோ, காவல் துறை ஆணையர் புஜித் ஜெயசுந்தரா ஆகியோரை ராஜினாமா செய்ய இலங்கை அதிபர் சிறிசேன உத்தரவிட்டுள்ளார். கடந்த 4ம் தேதி உளவுத் துறை குண்டு வெடிப்பு குறித்து தகவல் அளித்துள்ளது. ஆனால் இந்த தகவல்களை முறையாக அதிபர் மற்றும் பிரதமருக்கு தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Discussion about this post