இலங்கையில் அவசர நிலையை நீடித்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து நாடு முழுவதும் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசரநிலை சனிக்கிழமையுடன் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார். அவசர நிலையின் போது இலங்கை ராணுவத்திற்கும் காவல்துறைக்கும் வரம்பற்ற அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. சந்தேகப்படும் நபர்களை ராணுவமும் காவல்துறையும் கைது செய்யவோ, விசாரணைக்கு அழைத்துச் செல்லவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.