மேற்கு இந்திய தீவு நாடுகளைச் சேர்ந்தவர் 29 வயதான யோகன் பிளேக். ஓட்டப்பந்தய வீரரான இவர், கடந்த 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இரண்டு வெள்ளிப் பதக்கமும், 2018ல் காமன்வெல்த் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். முன்னதாக, 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் பங்கற்ற பிளேக், 100 மீட்டர் ஓட்டப்பந்தய தொடர் மூலம் உலக சாம்பியன் ஆனார்.
இந்நிலையில், உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரர்களில் ஒருவரான யோகன் பிளேக், ஐபிஎல் டி20 லீக்கில் விளையாட ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ‘‘நான் இன்னும் இரண்டு ஆண்டுகள் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்பேன். பின்னர், கிரிக்கெட் தொடர் மீது ஆர்வம் காட்ட இருப்பதாக பிளேக் கூறியுள்ளார். ஆனால், மேற்கு இந்திய தீவு அணியில் விளையாட விருப்பம் இல்லை என்றும் மாற்றாக டி20 தொடரில் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அது, இந்தியாவில் நடைபெறும் மிகப் பெரிய தொடரான ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டால், தான் விளையாடுவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அல்லது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியாக கூட இருக்கலாம் என்று பிளேக் கூறியுள்ளார்.
இதற்கு காரணம் மேற்கு இந்திய தீவு அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல், பெங்களூர் அணிக்காக நீண்ட வருடங்களாக விளையாடி உள்ளார். குறிப்பாக, விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் இருப்பதால் பெங்களூர் அணியை பிடிக்கும் என்று பிளேக் தெரிவித்தார். கொல்கத்தா அணியிலும் கெய்ல் விளையாடி இருப்பதால் அந்த அணியையும் பிடிக்கும் என்றும் கூறினார்.
மேலும், மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற கரிபீயன் பிரிமீயர் லீக் தொடரில் பங்கேற்கும் ஜமைக்கா தல்லாவாஸ் அணி, என்னை அணுகிய போது, நான் முடியாது என்று சொல்லி விட்டேன். ஏனென்றால், நான் அப்போது உலக சாம்பியன்ஷிப் தொடருக்காக பயிற்சியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன்.’’ என்றார்.
Discussion about this post