தெளிப்பு நீர்பாசனம் மூலம், கூடுதல் லாபம் ஈட்டி வருவதாக ஈரோடு மாவட்ட பெண் விவசாயி நம்பிக்கை தெரிவிக்கின்றார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்துள்ளது குரும்பபாளையம்,அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி கவிதா.தனக்கு சொந்தமான 4 ஏக்கர் பரப்பளவில் தெளிப்பு நீர் மூலம் விவசாயம் செய்து வருகிறார்.வாழை,சின்னவெங்காயம், நிலக்கடலை போன்ற பயிர்களை சாகுபடி செய்யும் இவர், தெளிப்பு நீர் பாசனம் மூலம் பயிர்களுக்கு குறைந்த அளவு தண்ணீரே போதுமானது என்கிறார்.மேலும் பயிர்களின் மேல் பகுதியில் நேரடியாக தண்ணீர் தெளிப்பதால், அஸ்வினி போன்ற நோய்கள் தாக்குவதில்லை என்றும் தெரிவிக்கின்றார்.
Discussion about this post