பழனி மலைக்கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிறப்பு பாதுகாப்பு பிரிவு மற்றும் நுண்ணறிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, பழனி முருகன் கோயிலில் சிறப்பு பாதுகாப்பு பிரிவு மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். மின்இழுவை ரயில், ரோப்கார், படிப்பாதை, அன்னதானக் கூடம், மலைக்கோவில் உட்பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், பழனி டி.எஸ்.பி விவேகானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.