தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தங்கமுலாம் பூசிய கோபுர கலசங்களை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா 23 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தஞ்சை பெரிய கோயில் கோபுர உச்சியில் உள்ள 12 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான கலசத்தை சீரமைக்க கீழே இறக்கப்பட்டது. இதேபோல் அம்பாள், விநாயகர், முருகன் உள்ளிட்ட சன்னதிகளின் கோபுர கலசங்களும் இறக்கப்பட்டன. பாரம்பரிய முறைப்படி கலசங்கள் சுத்தம் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசும் பணிகள் தொடங்கியது.
தற்போது, இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், வரும் 30ஆம் தேதி கோபுரத்தில் கலசங்கள் கோபுரத்தின் மீது பொருத்தப்பட உள்ளது. இதையடுத்து, தங்கமுலாம் பூசிய கோபுர கலசங்களை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கோயில் வளாகம் முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் வெடி குண்டு நிபுணர்களும் சோதனை மேற்கொண்டனர். குடமுழுக்கு விழாவையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் 2ஆம் நாள் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.
Discussion about this post