இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான ரம்ஜான் நோன்பு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது.
இஸ்லாமியர்களின் 5 கடமைகளின் ஒன்றாக ரம்ஜான் நோன்பு கருதப்படுகிறது. ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து 5 வேளை தொழுகை செய்வார்கள். மாலையில் நோன்பு திறக்கப்படும். ஷவ்வால் மாதம் 29-ம் நாளில் வானில் தோன்றும் பிறையை வைத்து இந்த நோன்பு தொடங்கப்படுகிறது. பிறை தென்படாத சூழலில் அதற்கு அடுத்த நாள் முதல் நோன்பு தொடங்கும்.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரமலான் நோன்பு இன்று தொடங்கியது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் இன்று காலை சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டன. நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஷஹர் என்ற உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் ஷஹர் வழங்கப்படுகிறது.
ரமலான் நோன்பு துவங்கியதையடுத்து உலகப் புகழ்பெற்ற நாகை நாகூர் தர்காவில் தாராவீ என்ற சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையில் நாகை, திட்டச்சேரி, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
Discussion about this post