இலங்கையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கூறியுள்ளார்.
இலங்கையில் நடந்த தீவிரவாத வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை அமைந்தகரையில் உள்ள பிளெஸ்ஸிங் ஒர்ஷிப் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. பாதிரியர் ஜான் தலைமையில் நடந்த பிரார்த்தனையில், கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதில் முன்னாள் எம்பி. எஸ்.ஆர்.விஜயகுமார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Discussion about this post