யூனியன் பிரதேச ஆளுநர்களுக்கு சிறப்பு அதிகாரங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. டெல்லி, சண்டிகர், புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள், லட்சத்தீவு, டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹாவெலி ஆகியவை யூனியன் பிரதேசங்களாக உள்ளன.
இவை, துணை நிலை ஆளுநர்களால் நிர்வாகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், சில யூனியன் பிரதேசங்களில் அடிப்படை கட்டமைப்பு சம்பந்தப்பட்ட பணிகள், ஒப்பந்தங்களில் அதிகளவில் முறைகேடுகள் நடப்பதாகவும், அது தொடர்பான ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதன்படி, கீழ் நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக நியமிக்கும் அதிகாரத்தை, துணை நிலை ஆளுநர்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Discussion about this post