மகா சிவராத்திரியையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் இரவு முழுவதும் சிறப்பு ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சிவராத்திரியை முன்னிட்டு அண்ணாமலையாருக்கு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாரை வழிபட்டனர். மேலும் மகா சிவராத்திரியையொட்டி லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பாக நடைபெற்ற அண்ணாமலையார் கோயில் மகா சிவராத்திரி அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை வழிபட்டனர்
மகா சிவராத்திரியையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் நடத்தப்பட்ட நான்கு கால சிறப்பு அபிஷேகங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். உலகப்புகழ் பெற்ற பழமையான தஞ்சாவூர் பெரிய கோயிலில் மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி பிரகன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி வெகுசிறப்புடன் துவங்கப்பட்டு, அதில் ஏராளமான நாட்டிய கலைஞர்கள் பங்கேற்றனர். மேலும் மகா சிவராத்திரியையொட்டி, பெருவுடையாருக்கு விபூதி, திரவியங்கள், மஞ்சள், பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. சிறப்பு ஆராதனைகள், அபிஷேகங்களும் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோவிலில் மகாசிவராத்திரி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. நெல்லையப்பர் காந்திமதி அம்பாளை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 63 நாயன்மார்கள் சன்னதி முன்பாக சிவனடியார்கள் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் செய்து வழிபட்டனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தது.
நெல்லையப்பர் கோவிலில் சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட்டது நான்கு கால சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன
காந்திமதி அம்பாளை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் சிவனடியார்கள் சிவனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு
கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவும் கலந்துக் கொண்டார். மகா சிவராத்திரியையொட்டி, தீபாராதனை, வழிபாடு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நடைபெற்றது. இந்நிகழ்வுக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் ஏராளமான நடனக் குழுக்கள் வருகை தந்திருந்தனர். சிவராத்திரியையொட்டி இரவு முழுவதும் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
Discussion about this post