சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மெட்ராஸ் வெஸ்ட் ரவுண்ட் டேபிள் 10 மற்றும் ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் பாரத் சார்பில் ஒருங்கிணைந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
நேபாளம், வங்கதேசம், பூட்டான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான 30 சிறப்பு பள்ளிக்கூடங்களில் இருந்து ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இரண்டாவது நாளாக நடைபெற்றுவரும் இந்த போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரிசுகளை வழங்கினார்.
Discussion about this post