கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 27 முன்களப் பணியாளர்களுக்கு சிறப்பு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சுதந்திர தின விழா அன்று நடைபெறும் நிகழ்ச்சியில், கொரோனா பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற்றிய முன்களப் பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக சிறப்பு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, சுகாதாரம், காவல், தீயணைப்பு, உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 27 முன்களப் பணியாளர்களுக்கு சிறப்பு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, விருதாளர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழகள் வழங்கப்படுகிறது.
Discussion about this post