மக்கள் பிரச்சினைகளை அறிந்து சிறப்பான தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தேசியம் தான் தங்களது நோக்கம் என்றும் பலவீனமான சமூகத்திற்கு அதிகாரம் அளிப்பது தங்களது கொள்கை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 5 ஆண்டுகளில் தனக்கு அளித்த ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்துக் கொண்ட மோடி, சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் கனவு நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் 75 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன என்று கூறிய மோடி 20 ஆயிரத்து 47ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி பெற்று ஆசியாவை இந்தியா வழிநடத்தி செல்லும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Discussion about this post