வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் வரும் 23, 24 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள விடுபட்ட மற்றும் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அண்மையில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 பேர் உள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 960 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 98 லட்சத்து 60 ஆயிரத்து 765 பேரும் உள்ளனர். முன்றாம் பாலினத்தவர் 5 ஆயிரத்து 742 பேரும், வெளிநாட்டு வாக்காளர்கள் 97 பேரும் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விடுபட்டவர்களை வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்க்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கடைசி வாய்ப்பாக 65 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post