புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தல் போதிய கால அவகாசம் வழங்கப்படாமல் நடத்தப்பட்டதாகக் கூறி அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பேரவைக் கூட்டத்தை புறக்கணித்தன.
புதுச்சேரி சட்டப்பேரவையில் காலியாக இருந்த சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று சட்டப்பேரவை செயலர் வின்செண்ட் ராயர் அறிவித்தார். இதையடுத்து காங்கிரஸ் சார்பில் சிவக்கொழுந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்நிலையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எவரும் வேட்புமனுவைத் தாக்கல் செய்யாததால் சிவக்கொழுந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று பதவியேற்பு நடைபெற்ற நிலையில், போதிய கால அவகாசம் தராமல் தேர்தல் நடத்தப்பட்டதாகக் கூறி அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவைக் கூட்டத்தைப் புறக்கணித்தன. தோல்வி பயத்தினால் முன் கூட்டியே பேரவைத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டதாகவும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் குற்றம் சாட்டினர்.
Discussion about this post