நாசா தனது நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான இரண்டு நவீன விண்வெளி உடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டு, விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. வீரர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது அணிய, சிறப்பம்சம் வாய்ந்த இரு உடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒன்று, நிலவின் தென் துருவத்தில் விண்வெளி வீரர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது, அவர்கள் எளிதாக அதிகபட்ச அசைவுகளை மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஆரஞ்சு நிற உடை, விண்வெளி வீரர்கள் நிலவுக்குப் புறப்பட்டுச் செல்லும் போதும், பின்னர் மீண்டும் புவிசூழலுக்குள் நுழையும் போதும் ஏற்படும் சூழல் மாறுபாடுகள், விண்வெளி வீரர்களின் உடல் நிலையை பாதிக்காமல் காக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த முறை நிலவின் தென் துருவத்துக்கு நாசா அனுப்பிய ராக்கெட், அங்கு மோதிச் சிதறியது. ஆனால் அதன் மூலம் நிலவின் மேற்பரப்புக்குக் கீழ் பெருமளவிலான பனிக்கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post