தூத்துக்குடியில், தென்மண்டல அளவிலான கராத்தே போட்டிகள் தொடங்கியது.
தூத்துக்குடியில், தனியார் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில், தென் மண்டல அளவிலான கராத்தே போட்டிகள் துவங்கியுள்ளது. ஸ்பிக் நகரில் உள்ள சில்வர் ஜூப்ளி அரங்கில் நடைபெற்று வரும் போட்டியில் தேனி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களை சேர்ந்த 600 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
முதல் சுற்று போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் அக்டோபர் மாதம் 18, 19 தேதிகளில், மதுரையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இப்போட்டிகள், வயது மற்றும் உடற் எடை அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றது.
Discussion about this post