தீபாவளிக்கு 8 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 8 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி பண்டிகையை கொண்டாட லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருகளுக்கு செல்லவுள்ளனர். இதனை தொடர்ந்து விரைவு ரயில்களில் ஏற்கனவே முன்பதிவு முடிந்து விட்டதால், காத்திருப்பு பட்டியலில் உள்ள ஏராளமானவர்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் தீபாவளியையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு 8 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை இறுதியானது அல்ல என்றும், இதில் கூடுதல் ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version