திரைப்பட பைனான்சியர்களுக்காக புதிதாக சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
திரைப்பட துறையில், அதிகமாக முதலீடு செய்பவர்களான சினிமா பைனான்சியர்களுக்காக புதிதாக சங்கம் துவக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் என்று பெயரிடப்பட்ட இந்த சங்கத்தின் அறிமுக நிகழ்ச்சி, சென்னை தி. நகரில் நடைபெற்றது.
இச்சங்கம் திரையுலகில் உள்ள அனைத்து சங்கங்களுடனும் ஒற்றுமையுடன் இணைந்து திரைப்படத்துறை வளர்ச்சிக்காக பாடுபடும் என சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறினார். துணை தலைவராக சந்திரப்பிரகாஷ் ஜெயின், பொருளாளராக அன்பு செழியன், செயலாளராக அருண் பாண்டியன் என ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Discussion about this post