பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் இருந்தது போக சாகுபடிக்காக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் பல்லவி பல்தேவ் தண்ணீரை திறந்து வைத்தார்.
இந்த அணையின் மூலம் 2 ஆயிரத்து 865 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைபகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரித்து உளளது. இந்த நிலையில், தேனி மாவட்ட விவசாயிகள் முதல் போக சாகுபடி செய்ய வசதியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித் ஆட்சித் தலைவர் பல்லவி பல்தேவ், விவசாயிகள் அனைவரும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக மகசூலைப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Discussion about this post