சூர்யாவின் 'சூரைப்போற்று' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

நடிகர் சூர்யா ‘காப்பான் ‘ திரைப்படத்திற்குப் பிறகு ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து வருகிறார். கதா நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் சுதா கொங்கரா இப்படத்தை இயக்கி உள்ளார்.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்த நிலையில், பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து ‘சூரைப்போற்று’ போஸ்டர் ட்விட்டர் வலைதளத்தில் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரென்டாகி வருகிறது.

மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா, தற்போது நடிகர் சூர்யாவை வைத்து ‘சூரைப்போற்று’ படத்தை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version