முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்துக்கு எதிராக ஆப்பரேசன் புளூஸ்டார் என்னும் பெயரில் ராணுவ நடவடிக்கை எடுத்ததற்குப் பழிவாங்கும் வகையில் 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்திராவின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.
இந்திரா காந்தியின் 35-வது நினைவு நாளான இன்று டெல்லி சக்தி ஸ்தல்லில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசு முன்னாள் துணைத் தலைவர் அமீது அன்சாரி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து இந்திரா நினைவிடத்தில் பன்மதப் பிரார்த்தனையும் நடைபெற்றது.
Discussion about this post