பராமரிக்க முடியாத தந்தையை வெட்டிக் கொன்ற மகன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பெத்தானேந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் சேவுகன். 80 வயதான இம்முதியவர், இவரது மகன் வீராச்சாமி வீட்டில் வசித்து வந்தார். வீராசாமி குடிப்பழக்கம் உள்ளவர்… தன்னை வளர்த்து ஆளாக்கிய தந்தையை பராமரிப்பதை பாரமாக எண்ணிய வீராசாமி, அவ்வப்போது தன் தந்தையை திட்டிக்கொண்டே இருந்துள்ளார்..

இந்நிலையில் மதுபான கடைக்கு சென்று மது அருந்திவிட்டு வீட்டு வந்த வந்த வீராசாமி, தந்தையை வழக்கம் போல கடுமையான வார்த்தைகளால் திட்டிவிட்டு, ஆத்திரத்தில் கத்தியை எடுத்து தந்தையை சரமாரியாக வெட்டியுள்ளார்.

சம்பவ இடத்திலேயே சேவுகன் உயிர் இருந்த நிலையில் வீராச்சாமி காவல் நிலையம் சென்று, தனது 80 வயது தந்தையை யாரோ கொலை செய்து விட்டார்கள் என்று நாடகமாடி உள்ளார்.

சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை செய்த காவல்துறையினர் வீராச்சாமி தான் தனது தந்தையை கொன்றுவிட்டு நாடகம் ஆடுகிறார் என்பதை அறிந்து அவரை கைது செய்தனர். தந்தையை எப்படி கொலை செய்தார் என்பதையும் வீராசாமி நடித்துக்காட்டினார்.

Exit mobile version