தமிழகத்தில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தென்பட தொடங்கியது.
பூமியும்-சந்திரனும், சூரியனுக்கு நேராக ஒரே நேர்க் கோட்டில் வரும் போது சந்திரன் சூரியனை மறைத்து பூமியில் வெயில் விழாதபடி மறைக்கும் சூரியகிரகணம் இன்று தோன்றுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சூரிய வளைய சூரிய கிரகணத்தின்போது சூரிய ஒளியை சந்திரன் 93 சதவீத அளவுக்கு மறைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அதிசய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் தமிழகத்தில் தென்பட தொடங்கியது. சுமார் 8 மணியளவில் தொடங்கிய இந்த சூரிய கிரகணம் 11.30 மணி வரை நீடிக்கும் என்றும் நீலகிரி மாவட்டம் உதகையில் மட்டும் சூரிய கிரகணத்தை முழுமையாக பார்வையிடலாம் என்று கூறப்படுகிறது.
சூரிய கிரகண ஒளி கண்களில் உள்ள விழித்திரையை பாதிக்கக்கூடிய வாய்ப்புள்ளதால் வெறும் கண்களால் சூரியனை பார்க்க வேண்டாம் என மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் இந்த நிகழ்வை ஊட்டி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் காண முடியும். இந்த சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்த்து ரசிக்க சென்னையில் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post