சமூக வலைத்தளங்கள் நாளுக்கு நாள் நாட்டுக்கு ஆபத்தானதாக மாறி வருவதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளக் கணக்குகளோடு ஆதார் எண்ணை இணைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சமூக வலைத்தளங்கள் நாளுக்கு நாள் நாட்டுக்கு ஆபத்தானதாக மாறி வருவதாகத் தெரிவித்தனர்.
சமூக வலைத்தளக் குற்றங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சரி செய்ய வேண்டியது அரசின் கடமை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் செய்திகளுக்கு வழிகாட்டுதல்களை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
சமூக வலைத்தளத்தில் செய்திகளைப் பதிவிடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 3 வாரத்திற்குள் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.