சிறுத்தை மற்றும் நாய் குட்டியின் ஆத்மார்த்தமான நட்பு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இது, சின்சினாட்டி மாகாணத்தில் இருக்கும் பொட்டானிக்கல் கார்டனில் தான் நடந்து உள்ளது. இந்த பொட்டானிக்கல் கார்டன் என்றால் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஏன் என்றால் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் விலங்குகள் என்றால் மக்களுக்கு ஒரு விருப்பம்.
சின்சினாட்டி வன உயிரியல் காப்பகத்தில் கிரிஷ் என்ற சிறுத்தை இந்த வருடம் தொடக்கத்தில் பிறந்தது. சில நேரங்களில் தனியாக பிறக்கும் சிறுத்தைகள் உயிருடன் இருப்பது சவாலான காரியம். அதனால், அங்குள்ள காப்பாளர்கள் அந்த சிறுத்தைக்கு நண்பனாக ரீமஸ் என்ற நாயை அறிமுகம் செய்தனர்.
சில நாள்கள் கழித்து இந்த இரண்டு உயிரினங்களும் ஒருவர் மீது ஒருவர் பொழியும் அன்பை அங்குள்ள காப்பாளர்கள் வியந்த போய் பார்த்தனர். அதை வீடியோ எடுத்து ஆன்லைனில் ஷேர் செய்துள்ளார்கள். சில நிமிடங்களில் வரவேற்பு அதிகமாக வந்தது. அதன் பிறகு ட்விட்டர் பக்கத்தில் அதிக ஷேர் ஆகி தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
Discussion about this post