ராம்கோ நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து, அரியலூர் அரசு பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்க, 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட் வகுப்பறை, இப்பள்ளியில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைவதோடு, அறிவியல் சார்ந்த பாடங்களின் வரைபடங்கள், வடிவங்களை திரையில் காண்பிப்பதால், மாணவர்கள் அதை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என வகுப்பறையை துவங்கி வைத்த ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்தார்.
Discussion about this post