சென்னையில், பிளேடை காட்டி மிரட்டி தூக்க மாத்திரைகளை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை நொளம்பூரில் 18-வது தெருவில் உள்ள மருந்து கடைக்குள், உடலில் வெட்டுக் காயங்களுடன் மர்ம நபர் ஒருவர் புகுந்தார். அங்கிருந்தவர்களிடம் தூக்க மாத்திரை வேண்டும் என்று அந்த நபர் கேட்டுள்ளார். மருத்துவரின் சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரையை தர முடியாது என மருந்து கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், கையில் வைத்திருந்த பிளேடை காட்டி மிரட்டி, கடையில் இருந்த தூக்க மாத்திரையை தேடி எடுத்து சென்றனர். இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
Discussion about this post