மகாராஷ்டிராவில் 200 அடி ஆழ்குழாய் கிணற்றில் சிக்கிய 6 வயது சிறுவனை தேசிய பேரிடர் மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர்
புனே மாவட்டத்தை அடுத்த தொரண்டேலே கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்தபோது அருகில் இருந்த ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். சிறுவனை மீட்க போலீசார் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காததால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் அழைக்கப்பட்டனர். இரவு முதல் காலை வரையாக சிறுவனை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், 16 மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டார்.
Discussion about this post